Gemini School of Astrology

மனைவியுடன் or கணவனுடன் சந்தோஷமாக இருக்கும் 5 வழிகள்

💓1 அன்பாக இரண்டு வார்த்தைகள் பேசுவது
💓2 அவர்களோடு இணைந்து அவர்களுக்கு உதவி செய்வது
💓3 அவர்களுக்கு நேரத்தை ஒதுக்கி அவர்களோடு உரையாடுவது
💓4 உடல் மொழியால் அவர்களோடு இணைந்து இருப்பது
💓5 அவர்களுக்கு பிடித்தமான பொருள்களை பரிசளிப்பது.

இதற்கு கொடுப்பினை வேண்டும் அதை நாம் ஜோதிடத்தில் வழியாக பார்போம்.

💓1அன்பாக இரண்டு வார்த்தைகள் பேச

லக்னத்தோட ஜீவகாரங்களோடு சுக்கிரன் சந்திரன் புதன் தொடர்பு இருக்க வேண்டும்.

💓2 அவர்களோடு இணைந்து அவர்களுக்கு உதவி செய்வது (வீட்டிலும் அலுவலகத்திலும் உடன் உதவி செய்வது)

அதற்கு களஸ்திரகாரகனோடு சுப கிரகங்களின் தொடர்பும் ஏழாம் பாவத்தில் சுப கிரக தொடர்பு இருந்தால் அந்த உதவி கிடைக்கும். (குரு சுக்கிரன் புதன் சந்திரன்)

💓3 மனைவிக்கோ அல்லது கணவனுக்கோ நேரத்தை ஒதுக்கி அவர்களோடு உரையாடுவது

இருவருக்கும் பத்தாம் பாவம் பலவீனமாக இருந்தது 3 7 11 ஆம் பாவம் பலமாக இருக்கும் பட்சத்தில். தொழிலை விட கணவன் மனைவியுடன் அதிக நேரம் செலவழிப்பார்கள்.

💓4 உடல் மொழியோடு அவர்களுடன் இணைந்து இருப்பது. (கைகோர்த்து
நடப்பது தாம்பத்தியம் இன்னும் பல)

அதற்கு ஜீவக்காரனும் லக்னத் தொடர்பும் 3 7 11 ஆம் பாவத்தில் உள்ள கிரகங்களின் சுபத்துவம் மட்டுமே மேற்கண்ட நிகழ்வு நடக்கும்.

💓5 கணவனுக்கும் மனைவிக்கும் பரிசளிப்பது (gift)

லக்கன அதிபதி மற்றும் ஏழாம் அதிபதி இவை இரண்டும் ஒன்றுக்கொன்று எதிர்மறையான பாவங்களில் இல்லாமல். லக்னத்தோடு சனி கேது போன்ற கிரகங்களின் தொடர்பில்லாமல் இருக்க வேண்டும்.

மேற்கண்ட அமைப்பு இருந்தால் கணவனும் மனைவியும் ஒத்து சந்தோஷமாக வாழும் வாய்ப்பு உண்டு.

இந்த ஐந்தில் ஒன்று இருந்தாலும் உங்கள் வாழ்க்கையில் சிறப்பு இரண்டுக்குமேல் இருந்தால் வசந்தம் தான். உங்களில் யாருக்கு இருக்கிறது .

மேற்கண்ட ஐந்தில் ஒன்று கூட இல்லை என்றால் கவலை வேண்டாம் அடுத்த ஜென்மத்தில் பார்த்துக் கொள்வோம்.

 

Leave a Reply