வெற்றிக்கும் தோல்விக்கும் இடையில் ஜோதிடத்தின் பயணம்.
வெற்றிக்கும் தோல்விக்கும் இரண்டே இரண்டு வித்தியாசம் தான். வெற்றியடைந்தவன் கொண்டாடப்படுகிறான்
தோல்வி அடைந்தவனை இந்த உலகம் புறக்கணிக்கிறது.
இந்த இரண்டுக்கும் இடையில் தான் உலகில் உள்ள அத்தனை பேரும் பயணித்துக் கொண்டுள்ளனர்.
வெற்றியடைந்தவன் அத்தனை பேரும் புத்திசாலிகள் என்று நிரூபித்து விட முடியாது.
தோல்வி அடைந்தவர்கள் அத்தனை பேரும் முட்டாள்கள் என்றும் நிரூபித்து விட முடியாது.
ஆக வெற்றிக்கும் தோல்விக்கும் உழைப்பு ஒன்றே
வெற்றியடைந்தவர்கள் தன் அறிவால் விடாமுயற்சியால் உடல் பலத்தால் தன் அதிர்ஷ்டத்தால் அல்லது ஏற்ற இறக்கத்துடன் வாழ்ந்ததால் என்று பல்வேறு காரணங்களை கூறலாம்.
தோல்வியடைந்தவர்கள் அனைவருமே அறிவாளி இல்லாமலும் இல்லை விடா முயற்சி இல்லாமலும் இல்லை .ஏற்ற இறக்கத்துடன் வாழாமலும் இல்லை. ஆனாலும் முடிவு அவர்களுக்கு தோல்வி அடைந்தவர்களாகவே கருதப்படுவார்கள்.
ஜோதிடத்தில் வெற்றியடைபவர்களை பல்வேறு ஜோதிட காரணிகளை பயன்படுத்தி இவர்கள் வெற்றி அடைந்தவர்களாக அடையாளப்படுத்தப்படுவார்கள்.
ஜோதிடத்தில் தோல்வி அடைந்தவர்களை பல்வேறு ஜோதிட காரணிகளை பயன்படுத்தி தோல்வி அடைவார் என்று அடையாளப்படுத்தப்படுவார்கள்.
வெற்றிக்கும் 9 கிரகம் 12 பாவத் தொடர்பு உண்டு
தோல்விக்கும் 9 கிரகம் 12 பாவ தொடர்பு உண்டு
9 திசையிலும் வெற்றி பெற்றவர்கள் உண்டு
9 திசையில் தோல்வி அடைந்தவர்களும் உண்டு.
இங்கு வெற்றி என்பது பொருள் சார்ந்தது மட்டுமல்ல நீண்ட காலம் உயிர் வாழ்வது. நல்ல உறவுகளுடன் வாழ்வது. ஆரோக்கியமான அமைதியான காற்றோட்டம் உள்ள நல்ல இடங்களில் வாழ்வது. இன்னும் பல உள்ளன.
தோல்வி அடைந்தவர்கள் என்பது குறைந்த ஆயுள் காலங்களோடு வாழ்வது. உறவுகள்லால் புறக்கணிக்கப்பட்டு வாழ்வது. ஆரோக்கியமற்ற சூழலும் ஆரோக்கியமற்ற பகுதியிலும் வாழ்வது. போன்ற இன்னும் பல உள்ளன.
ஒருவனுக்கு வெற்றி மட்டுமே தேவை என்ற அடிப்படையில் அனைவரும் பயணிக்க முடியாது ஏனென்றால் ஒருவன் வெற்றி அடைய வேண்டும் என்றால் இன்னொருவன் தோற்க வேண்டும். எப்படி என்று சிம்பிளாக கூறுகிறேன்.
நீங்கள் பணத்தை தற்பொழுது பெறுபவராக இருந்தால் இன்னொருவர் பணத்தை இழக்க தயாராக இருந்தால் மட்டுமே நீங்கள் பெற முடியும். இது மேலோட்டமாக உங்களுக்கு பார்க்கும்போது அப்படித்தான் தோன்றும். உலகில் ஒருவர் வெற்றியும் ஒருவர் தோல்வியும் மாறி மாறி அடைந்து கொண்டே இருப்பார்கள். மொத்த வாழ்க்கையில் வெற்றியின் சதவீதம் அதிகமாக இருப்பவர் இந்த பிறப்பில் பயனடைந்தவராகவும்.
மொத்த வாழ்க்கையில் ஒருவரின் தோல்வி சதவீதம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் இந்த பிறப்பில் பயனில்லாதவராகவும் சித்தரிக்கப்படுவார்கள்.
இன்னும் ஜோதிட காரணிகள் கூற வேண்டுமென்றால். பொருளாதார வெற்றிக்கு ராகுவின் பங்களிப்பும் சுக்கிரனின் பங்களிப்பும் 2,6,10,11 பாவங்களின் பங்களிப்பும் அதிகம்.
பொருளாதாரத் தோல்விக்கு கேதுவின் பங்களிப்பும் சனியின் பங்களிப்பும் 8 12 பாவங்களின் பங்களிப்பும் அதிகமாக இருக்கும்.
இதேபோல் உடல் ஆரோக்கியம் உறவுகள் இருப்பிடம் ஒவ்வொன்றுக்கும் தனி தனி காரணங்களும் தனித்தனி பாவங்களும் தன் பங்களிப்பின் மூலம் ஒருவரை வெற்றியின் நாயகனாகவும் தோல்வியின் நாயகனாகவும் மாற்றும்.
இங்கு வெற்றி நாயகனாக நாம் வாழ போகிறோமோ.
தோல்வியின் நாயகனாக வாழப் போகிறோமா. என்பதை ஜோதிடத்தால் ஓரளவு புரிந்து கொள்ள முடியும்.
மூடநம்பிக்கை என்று இந்தப் பக்கத்தை தவிர்க்க ஆரம்பித்தால் உங்களால் உலகத்தை வேறு ரூபத்தில் எதிர்காலம் பற்றி புரிந்து கொள்ளவே முடியாது என்பதை இதில் குறைந்த காலமாவது பயணித்து பார்த்தால் தான் தெரியும்.
Selvam astrologer Coimbatore
Call WhatsApp number 9842780218
www selvamastrologer.com