JAMAKOL PRASANNAM EXAMPLE CHART 1
கேள்வி கேட்காத பிரசன்னம்? ஜாதகம் பார்க்க வரும் போது எந்த கேள்வியும் கேட்காமல் வாடிக்கையாளர் வந்த அமர்ந்த நேரத்து உடைய பிரசன்னம்.
ஜோதிடராகிய நாம் இந்த வாடிக்கையாளரின் தற்போதைய பிரச்சனை என்ன என்பதை நாம் பிரச்சனத்தை வைத்து கணித்து சொல்ல வேண்டும்.
உதயத்தை நோக்கி சுக்கிரன் வருகிறார்.ஆருடம் ஆறாவது வீட்டிலும்.கவிப்பும் ஆறாவது வீட்டிலும் உள்ளார்.ஐந்தாம் பாவாதிபதியான செவ்வாயை கவிப்பு கவிக்கிரார்.
இங்கு அவர்கள் ஜாதகம் பார்க்க வந்ததின் நோக்கம் என்னவென்றால் பெண் குழந்தைக்கு காதல் மற்றும் திருமண தடை ஏற்பட்டிருந்தது அதைப்பற்றி கேட்பதற்காகவும். ஆண் குழந்தைக்கு ஆட்டிசம் நோயால் உடல் பாதிக்கப்பட்டு அவரின் எதிர்காலம் பற்றிய கேள்விக்காகவே ஜாதகம் பார்க்க வந்திருந்தார்கள்.
உதயத்தை நோக்கி சுக்கிரன் வருவது பெண் குழந்தையை குறிக்கும். ஆறில் ஆருடமும் கவிப்பு இருப்பது நோயைப் பற்றி குறிக்கும். ஐந்தாம் அதிபதி கவிப்பில் இருப்பது குழந்தைகளுக்கு பிரச்சனை காதல் தடை குழந்தைகள் உடல் நலம் பாதிக்கப்படுவது பற்றிய தகவல்களை பிரசன்னம் கூறுகிறது.
ஜாதகம் பார்க்கும் பொழுது நாம் கூறிய குழந்தைகள் பற்றிய செய்தியோடு அவர்களின் திருமண தடையும் நோயையும் குழந்தைகளால் தற்போது அவருக்கு பிரச்சனை என்பதையும் சுட்டிக் காட்டினால் அவர்கள் நாம் பலன் சொல்வது சரியாக சொல்கிறோம் என்று அவர்கள் பெருமிதம் அடைவார்கள் இது ஜாமக்கோள் பிரசன்னத்தில் சாத்தியமானது ஒன்றே. வேறு எந்த முறையிலும் இந்த மாதிரியான வாய்ப்புகள் மிக எளிமையாக இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
JAMAKOL PRASANNAM EXAMPLE CHART 2