கோபிசெட்டிபாளையம் அருகே வாஸ்து பார்க்க சென்றிருந்தேன் பழைய வீட்டின் அமைப்பு பார்க்க நேர்ந்தது 70 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய வீடு
வடக்கு எல்லை வரை கட்டடம்
கிழக்கு எல்லை வரை கட்டடம்
வடகிழக்கு மூடல்
தென்மேற்கு கிணறு
தெற்கு பார்த்த மனை
தெற்கு வாசல் மட்டுமே .வடக்கு கிழக்கு வாசல் கிடையாது. வடக்கு கிழக்கு அடுத்தவரின் வீட்டோடு இணைத்து கட்டப்பட்ட கட்டிடம்.
அந்த வீட்டில் குடியிருந்த அனைவருக்கும் திடீரென்று ஹார்ட் அட்டாக் மூலம் மரணம். 60 to 65 வயதுக்குள்
அந்த வீட்டிற்கு வாழ வந்த பெண்ணிற்கு விபத்து ஏற்பட்டு மூன்று மாதம் மருத்துவமனையில் இருந்து உயிர் தப்பி வந்துள்ளார்.
மிகவும் தீய பலன்களை கொடுத்துக் கொண்டு வந்துள்ளது அந்த வீட்டின் வாஸ்து அமைப்பு.
எந்த வீடாக இருந்தாலும் வடக்கு அல்லது கிழக்கு வாசல் இல்லாத வீடாக இருந்தால் அது மிகவும் தோஷமுள்ள வீடாக மாறி அங்கே குடியிருப்பவர்களை பாதிப்புக்கு உள்ளாக்குகிறது.
மேற்கு வாசல் தெற்கு வாசல் அமைந்தாலும் அந்த வீட்டிற்கு கிழக்கு அல்லது வடக்கு வாசல் நிச்சயம் இருக்க வேண்டும்.