உலகில் மனிதராக பிறந்த ஒவ்வொருவரும் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சினைகள் ஏராளம். கடந்த பிறவியின் போது மனிதன் செய்த வினையை (கர்மா) அனுசரித்து இந்த பிறவியில் பலனை அனுபவிப்பதாக ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன.
“பற்றித்தொடரும் இருவினைப் புண்ணிய பாவமே” என்றார் பட்டினத்தார். ஒருவன் முற்பிறவியில் செய்த புண்ணியத்தையும், பாவத்தையும் அனுபவிப்பதற்காகவே மறுபடியும் பிறவி எடுக்கிறான் என்பது இதன் பொருள். வாழ்நாளில் பாவச்செயல்களை செய்து வருபவன் வசதியாக வாழ்வதையும், பிறருக்கு தீங்கு நினைக்காதவன் கஷ்டப்படுவதையும் பார்க்கிறோம். இதற்கு அவரவர் செய்த ஊழ்வினை பூர்வ ஜென்ம வினைப்பயனை அனுபவிக்கிறார்கள் என்கிறார்கள்.
“முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்” என்பது முதுமொழி. முற்பகல் என்பது முற்பிறவியையும், பிற்பகல் என்பது இந்தப்பிறவியை குறிக்கும். கடந்த பிறவியில் அவன் செய்த புண்ணியச்செயல்கள் இப்பிறவியில் வசதியாக வாழ்க்கையை கொடுத்து இருக்கிறது. பாவச்செயல்கள் அழிவுக்கு வழிவகுத்து உள்ளது.
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன் (குரு), வெள்ளி (சுக்கிரன்), சனி, ராகு, கேது ஆகிய 9 கிரகங்களும் நவக்கிரகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த 9 கிரகங்களும் மனிதனின் வாழ்க்கையை நிர்ணயம் செய்யும் ஆற்றல் கொண்டவை. ஒவ்வொருவரின் உடலையும், மனதையும் நவக்கிரகங்கள் தான் இயக்குகின்றன.
சூரியன் நம் ஆத்மாவை இயக்குகிறது. சந்திரன் நம் மனதை செயல்படுத்துகிறது. செவ்வாயும், ராகுவும் நமக்கு பலன் தருகின்றன. புதன் கிரகத்தால் வாக்கு மேன்மை பெறும். வியாழன் ஞானத்தை வழங்கும். ஒருவரது காம இச்சைகளையும், இந்திரியங்களையும் வெள்ளிக்கிரகம் இயக்குகிறது. துக்கம், நரம்பு மற்றும் மரணத்தை சனிக்கிரகம் தீர்மானிக்கிறது.
ஒருவரது ஜாதகத்தில் நவக்கிரகங்களில் ஏதாவது ஒன்றில் தோஷம் ஏற்பட்டால் அந்த கிரகத்துக்குரிய பலன்கள் முழுமையாக கிடைக்காமல் போய்விடும். மேலும் கிரகம் சுழற்சி காரணமாக கெடுதல் பலன்கள் தான் நடக்கும். அதில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்வதற்கு நமது முன்னோர்கள் ரிஷிகள், தோஷநிவர்த்தி தரும் ஆலயங்கள்,பரிகார முறைகள் சூட்சுமங்களை அளித்துள்ளனர்.
அவசர காரியத்காக வெளியில் செல்லும் போது கோடை வெயில் கொளுத்தினாலோ, கொட்டும் மழை பெய்தாலோ அவற்றில் இருந்து பாதுகாத்து கொள்வதற்காக தலைக்கு மேல் குடை பிடித்துக் கொண்டும், கால்களில் செருப்பு அணிந்து கொண்டும் செல்கிறோம். அதைப்போல் பிரச்சினைகள் பெரிதாக வரும் போது அதை எதிர்கொண்டு தீர்வு காண தோஷ நிவர்த்தி ஆலயங்களுக்கு சென்று பரிகார முறைகளை கடைப்பிடித்து மனமுருகி இறைவனை வேண்டிக்கொண்டால் கிரகங்கள் கொடுக்கும் கஷ்டங்கள் நிச்சயம் குறைந்து விடும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.
“கல்லாப்பிழையும் கருதாப்பிழையும் கசிந்துருகி
நில்லா பிழையும் நினையாப்பிழையும்
நின்னைந்தெழுத்தை
சொல்லாப்பிழையும், துதியாப்பிழையும், தொழாப்பிழையும்
எல்லாப்பிழையும் பொறுத்தருள்வாய்
கச்சிஏகம்பனே” – என்று
பட்டினத்தார் பாடியபடி நமது பிரச்சினைகளை தீர்க்ககோரி மனமுருகி வேண்டிக்கொண்டால் ஆண்டவனின் அருட்கடாட்சம் நிச்சயம் கிடைக்கும்.
தோஷங்களில் பலவகை உண்டு. அவற்றுள் முக்கியமானது:-
களத்திரதோஷம், புத்திரதோஷம், மாங்கல்ய தோஷம், கால சர்ப்பதோஷம் என்ற கால சர்ப்ப யோகம், பாலாரிஷ்ட தோஷம், பிரம்மஹத்தி தோஷம், நவக்கிரக தோஷம், பிதுர் தோஷம், பிறவி தோஷம், குல தெய்வ தோஷம் ஆகியவை ஆகும்.
1. சூரியன்
ஆடுதுறை அருகே சூரியனார் கோவில்
கும்பகோணம்
ரெட்ஹில்ஸ் அருகே ஞாயிறு கோவில்
சென்னை – கொல்கத்தா நெடுஞ்சாலையில், புழல் சிறை முகாமிற்குப் பிறகு வலதுபுறம் திரும்பவும்
போரூர்/ குன்றத்தூர் அருகே உள்ள கொளப்பாக்கம் அகஸ்தீஸ்வரர் கோவில்
பருத்தியப்பர் கோயில் தஞ்சை-பட்டுக்கோட்டை சாலை
குறிப்பிட்ட நாட்களில் சூரியக் கதிர்கள் லிங்கத்தின் மீது படும் அனைத்து சிவாலயங்களும்.
2. சந்திரன்
திருவையாறு அருகே திங்களூர்
தஞ்சை
தாம்பரம் / குன்றத்தூர் அருகே சோமங்கலம் சோமநாதீஸ்வரர் கோவில்
திருநாகேஸ்வரம் பிறைநூல் அம்பாள் ஆண்டுதோறும் ஒரு நாள் சந்திரனை வழிபடுகிறாள்
கும்பகோணம்
3. செவ்வாய்
மயிலாடுதுறை / சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயில்
பூந்தமல்லி வைத்தீஸ்வரன் கோயில்
பேரளம் அருகே சிறுகுடியில் மங்களேசர்/ கல்யாணசுந்தரேசர் கோவில்
மயிலியடுதுறை